தமிழ்நாடு

அரிவாளை காட்டி ஆபாசமாக பேசி அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல்

தந்தி டிவி

அரிவாளை காட்டி ஆபாசமாக பேசி அதிமுக தலைவர்களுக்கு விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் | TN Police | ADMK

அதிமுகவை சேர்ந்தவர்களை உயிரோடு விடமாட்டோம் என அரிவாளோடு மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

யாத்ரிகன் மீடியா யூடியூப் சேனலில் வெளியான வீடியோவை குறிப்பிட்டு அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில இணைச்செயலாளர் பாலமுருகன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வீடியோவில் அரிவாளோடு பேசும் விஜய் ரசிகர்கள், அதிமுக தொண்டர்களையும், கட்சி எம்.பி. சிவி சண்முகத்தையும் தகாத வார்த்தைகளால் தீட்டி கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார்கள் என புகாரில் தெரிவித்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தீய நோக்கத்தோடு வீடியோ வெளியிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடியோவை வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். வீடியோவில் ஆபாசமாக பேசுபவர்கள் விஜய் பெயர் கெட்டுப்போகும் என்பதால் அதிமுகவினரை விட்டு வைப்பதாகவும் பேசியிருக்கிறார்கள்.

PM Modi | PM மோடி அறிவித்தது போல்.. ஹைபவர் டீம்

Amitshah | Pralhad Joshi | அமித்ஷாவை சந்தித்த புதிய கல்வி அமைச்சர் - திடீர் மீட்டிங்

Breaking | TNPL | Women | IPL போல தமிழ்நாட்டில் இனி மகளிருக்கும்.. | வெளியானது அப்டேட்

PM Modi | திடீரென இன்ஸ்டாவில் PM மோடி.. வெளியானது புதிய வீடியோ

Actor Dhanush | "இந்த படத்திற்கு ஏன் தேசிய விருது" - உடைத்து பேசிய நடிகர் தனுஷ்