தமிழ்நாடு

ADMK | Maduranthakam | மதுராந்தகம் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு உற்சாக வரவேற்பு

மதுராந்தகம் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு உற்சாக வரவேற்பு

thanthitv

#ADMK #Maduranthakam #ByElection2026 #TNPolitics #ThanthiTV ADMK | Maduranthakam | மதுராந்தகம் பிரசாரத்தில் அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு உற்சாக வரவேற்பு மதுராந்தகம் தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செங்கல்பட்டு மதுராந்தகம் தொகுதிக்கு அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் மதுராந்தகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து, தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் திரளான அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் கலந்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். தொடர்ந்து தர்மராஜா கோயில் தெரு, வன்னியர் பேட்டை, செல்லியம்மன் தேரடி தெரு, மருத்துவமனை சந்திப்பு மற்றும் ஜி.எஸ்.டி. சாலை உள்ளிட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மூதாட்டி ஒருவர், கனிதா சம்பத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு, "நீங்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் எனக்கு ஓய்வூதியம் பெற்றுத் தந்தீர்கள்....அதனை இதுவரை நான் வாங்கிக் கொண்டிருக்கிறேன்" எனக் கூறினார். மேலும், "அதனால் எப்போதும் உங்களை மறக்க மாட்டேன்... எனது ஓட்டு உங்களுக்குத்தான்" எனக் கூறிய அந்த மூதாட்டி, வேட்பாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின்போது நடந்த இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தால், அதிமுக வேட்பாளர் கனிதா சம்பத் மற்றும் உடன் சென்ற கட்சியினர் நெகிழ்ந்தனர்.

BREAKING || சென்னை MTC பஸ்ஸில் அரங்கேரிய அதிர்ச்சி சம்பவம்... விசயம் தெரிய உடனே பறந்த உத்தரவு

POCSO Veeramani | வீரமணி கேஸ்.. ரேடாருக்குள் சிக்கும் மிருகங்கள்.. போலீசின் அடுத்த அதிரடி மூவ்

Gem Veeramani Case | தீவிரமடையும் ஜெம் வீரமணி பாலியல் வழக்கு.. தமிழகம் முழுவதும் அலசும் அதிகாரிகள்

TN Weather Report | 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் கொடுத்த அலர்ட்

Gem Veeramani Case | "அவங்க சிறையில் இருக்க காரணம் நான் தான்" - பகீர் கிளப்பிய காங், நிர்வாகி