தமிழ்நாடு

அதிராம்பட்டினம் : தரைதட்டி நின்ற மீன்பிடி படகுகள்... உள்வாங்கிய கடல்... அதிர்ச்சியில் பொதுமக்கள்

அரை கிலோ மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது.

தந்தி டிவி
அரை கிலோ மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால், தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அச்சம் நிலவுகிறது. அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் பகுதி மீனவர்கள், மீன்பிடிக்க செல்வதற்காக கடலுக்கு செல்லும் வாய்க்காலில் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை எடுக்கச் சென்றனர். அப்போது, 6 அடி ஆழமுள்ள வாய்க்கால் நீர் வடிந்து, படகுகள் தரைதட்டி நின்றதால் பதற்றம் அடைந்தனர். கடலுக்கு சென்ற பார்த்தபோது, அரை கிலோ மீட்டருக்கு உள்வாங்கியிருந்தது அவர்களை அச்சமடைய வைத்துள்ளது. மணல் திட்டுக்களாக காட்சியளிக்கும், உள்வாங்கிய கடல் குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC