தமிழ்நாடு

ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை முதற்கட்ட அகழாய்வு பணி துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் அகழாய்வு பணிகள் தொடங்கி உள்ளது. முதல் முறையாக மாநில அரசு சார்பாக இந்த அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஆதிச்சநல்லூரில் கடந்த மார்ச் மாதம் அகழாய்வு பணிகள் தொடங்கப்பட இருந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் அகழாய்வு பணியானது தொல்லியல் துறை அலுவலர் பாஸ்கரன் தலைமையில் நடைபெறுகிறது. இதேபோல், சிவகளையில் அகழாய்வு பணியினை தொல்லியல் துணை இயக்குநர் சிவானந்தம் தொடங்கி வைத்தார். சிவகளையை பொறுத்தவரை முதல் முறையாக அங்கு அகழாய்வு பணி நடைபெறுகிறது. ஆதிச்சநல்லூரில் தற்போது நடைபெறுவது 6ஆம் கட்ட அகழாய்வு பணியாகும்.

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC