ஆதிச்சநல்லூர் அகழாய்வில் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழிகள், கை மூட்டு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த ஆதிச்சநல்லூரில் கடந்த மே 25ம் தேதி முதற்கட்டமாக அகழாய்வு பணி துவங்கியது. இந்நிலையில், 3000 ஆண்டுகள் பழமையான 2 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அருகே 2 கை மூட்டு எலும்புகள் காணப்படுகிறது.