ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வின் முடிவுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையாக வெளியிடுவார் என தமிழ் வளர்ச்சி துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் புறநானூறு புதிய வரிசை வகை நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கீழடி அகழ்வாய்வின் நான்காவது கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இந்த அகழ்வாய்வில் இரட்டை சுவர்கள்
கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.