தமிழ்நாடு

சொந்த காருக்கே 'தீ'... நடுரோட்டில் போதையில் அட்ராசிட்டி -இளைஞர்களால் திருச்சியில் பரபரப்பு

தந்தி டிவி

திருச்சியில் மது போதையில் இருந்த இளைஞர்கள் தாங்கள் பயணித்த காரையே பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே சென்று கொண்டு இருந்த கார் சாலையோர தடுப்பில் மோதி நின்றுள்ளது. அப்போது பணியில் இருந்த போக்குவரத்து காவலர் காரில் இருந்த 2 இளைஞர்களை விசாரித்த போது அவர்கள் மது போதையில் இருந்தது தெரிய வந்தது. இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், அதில் ஒருவர் அருகேயுள்ள பெட்ரோல் நிலையத்திற்கு சென்று பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வந்துள்ளார். பின்னர் அவர் தான் பயணித்த காரின் மீது உற்றி அதற்கு தீ வைக்க முயன்றுள்ளார். இதனை தொடர்ந்து போலீசாரும் பொதுமக்களும் அவரை தடுத்தனர். கிரோன் மூலம் கார் காவல்நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், காரில் பயணித்த 2 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்