தமிழ்நாடு

எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

பெண் பத்திரிகையாளர்களை இழிவாக பேசியதாக புகார்

தந்தி டிவி

பெண் பத்திரிக்கையாளர்களை இழிவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, கோபால்சாமி என்பவர் தொடர்ந்த வழக்கில் நெல்லை மாவட்ட நீதிமன்றம் எஸ்.வி.சேகரை நேரில் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. அதில் இருந்து விலக்கு அளிக்க கோரி எஸ்.வி.சேகர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், எஸ்.வி.சேகர் நேரில் ஆஜராக தேவையில்லை என்று தெரிவித்தார். மேலும் இது தொடர்பான வழக்கை விசாரிக்க 6 வாரகாலத்திற்கு தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்