ஸ்ரீரங்கம் கோவில் மற்றும் கோவில் நிர்வாகிகள் மீது சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயில் சீரமைப்பு என்கிற பெயரில் பழங்கால சிலைகள் அப்புறப்படுத்தப்பட்டதாக அவர் தொடர்ந்த வழக்கில் புகாரை பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. புகாரை பதிவு செய்யாத நிலையில் தமிழக டிஜிபி மீது ரங்கராஜன் நரசிம்மன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை விரைவில் நடைபெற உள்ள நிலையில் கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் பேரில் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.