தமிழ்நாடு

உச்சநீதிமன்றம் சென்ற எம்.பி. கதிர் ஆனந்த் - வருமான வரித்துறைக்கு அதிரடி உத்தரவு

தந்தி டிவி

வருமான வரி வழக்கில், வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கதிர் ஆனந்த் சார்பில் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கதிர் ஆனந்த் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.கணேஷ், பி. வில்சன் ஆஜராகி வழக்கு கடந்து வந்த பாதையை குறிப்பிட்டு வாதிட்டனர். வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக திமுக எம்பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டனர். இது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு விசாரணைக்கும் இடைக் கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்