நெடுஞ்சாலை பணியின் போது விபத்து - கான்கிரீட் இயந்திரம் விழுந்து ஒருவர் பலி-ஒருவர் படுகாயம்
மதுரையில் வைகை ஆற்றின் கரைகளில் தடுப்புச் சுவர்கள் மற்றும் , சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது,.
இந்த நிலையில் நெடுஞ்சாலை பணி நடைபெற்றுக்கொண்டு இருந்த போது சிமெண்ட் கலவை இயந்திரம் வைகை ஆற்றின் கரையில் தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்துள்ளது. அப்போது அங்கு பணியில் இருந்த சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியை சேர்ந்த மாரீஸ்வரன் என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,. மேலும் காளிமுத்து என்பவர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்,.
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி உருண்டு விபத்து - படகை சுத்தம் செய்துகொண்டு இருந்த மீனவர் பலி
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு மீன்இறங்கு தளம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது படகை ஜெய்சங்கர் என்ற மீனவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்,. அப்போது மீன்களை ஏற்றி செல்வதற்காக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு லாரி திடீரென உருண்டு வந்து ஜெய்சங்கர் மீது மோதியது,. அதில் ஜெய்சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.