நாகை மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயு குழாய் தூய்மைப் பணியின் போது குழாயில் இருந்து ரப்பர் உருளை விளை நிலத்தில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அந்நிறுவனத்தில் திரண்ட மக்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, சுற்றுச்சுவர் இல்லாததே இதற்கு காரணம் என்றும், சுவர் அமைக்கப்பட்ட பின் பாதுகாப்புடன் தூய்மை பணிகள் மீண்டும் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஓ.என்.ஜி.சி, கெயில் நிறுவனங்களை தங்கள் பகுதியில் இருந்து அகற்றக்கோரி சாகும் வரை போராட தயாராக இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.