தமிழ்நாடு

ஆசை வீட்டுக்கு புதுமனை புகுவிழா... கனவு நினைவேறும் போது முடிந்த வாழ்வு - இப்படி ஒரு சோகம் யாருக்கும் வரக்கூடாது

தந்தி டிவி

செங்கல்பட்டு சிங்கப்பெருமாள் கோயில் கரும்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் - ஜெயலட்சுமி தம்பதிக்கு 2 வயதில் பெண் குழந்தையும், 5 வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர். வரும் 11ம் தேதி புதுமனை புகு விழாவிற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி விட்டு, இருவரும் பைக்கில் மாத்தூர் அருகே ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது யுடர்ன் செய்த ராட்சத லாரியைப் பார்த்து வெங்கடேசன் தனது பைக்கை நிறுத்தியுள்ளார். அந்த சமயத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து வந்த தனியார் பேருந்து அதிவேகமாக மோதியதில் ராட்சத லாரி, பைக், தனியார் பேருந்து என மூன்றும் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வெங்கடேசன் - ஜெயலட்சுமி தம்பதி உயிரிழந்த நிலையில் பேருந்தின் ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். பேருந்தில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ