தமிழ்நாடு

கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே கருக்கலைப்பு : 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த பரிதாபம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வீட்டிலேயே கருக்கலைப்பு செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
உத்தபுரம் கிராமத்தை சேர்ந்த, ராமன் - ராமுத்தாய் தம்பதியினருக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் மீண்டும் கர்ப்பமானதால், நான்காவதாக பெண் குழந்தை பிறக்கும் என எண்ணி கருவை கலைக்க ராமுத்தாய் முடிவு செய்துள்ளார். இதனையடுத்து செவிலியர் லட்சுமி உதவியுடன் வீட்டிலேயே ராமுத்தாய்க்கு கருக்கலைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு ராமுத்தாய் உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த உசிலம்பட்டி போலீசார் தனியார் மருத்துவமனை செவிலியர் லட்சுமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு