தமிழ்நாடு

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிப்பு

நாளை நடைபெற உள்ள 73-வது சுதந்திர தின விழாவில் இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்பட உள்ளது.

தந்தி டிவி
இந்திய எல்லைக்குள் அத்து மீறிய பாகிஸ்தானின் எஃப் 16 ரக விமானத்தை துரத்திச் சென்று தாக்கி அழித்தவர் அபிநந்தன். மேலும், பாகிஸ்தான் நாட்டு ராணுவத்திடம் சிக்கிய போதும் சூழ்நிலையை தீரத்துடன் எதிர்கொண்டு, இந்தியாவுக்கு திரும்பி வந்தார். இந்நிலையில், அபிநந்தனின் வீர தீர செயலை பாராட்டி அவருக்கு மத்திய அரசு வீர் சக்ரா விருது அறிவித்துள்ளது. இதே போல், தீயணைப்புத்துறையில் வீரதீர சேவை புரிந்த 56 வீரர்களுக்கும், குடியரசு தலைவர் விருதுகள் வழங்கப்பட உள்ளது. இவர்களில், தமிழகத்தை சேர்ந்த அதிகாரி உமாபதி தண்டபாணிக்கு துணிச்சலுக்கான விருது வழங்கப்படுகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்