தமிழ்நாடு

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 6 வயது சிறுமி பலி.. - பெற்றோர் பரபரப்பு புகார்..

தந்தி டிவி

வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 6 வயது சிறுமி திடீரென உயிரிழந்த விவகாரத்தில், பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரைகளை சிறுமி உட்கொண்டதாலயே..அவர் உயிரிழந்ததாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வரதராஜபுரத்தை சேர்ந்த ராஜாமணி - புவேனேஸ்வரி தம்பதியின் 6 வயது மகள் தியா ஸ்ரீ , கடந்த ஐந்தாம் தேதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு வயிற்றில் கட்டி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவமனையிலே சிகிச்சை பெற்று வந்த சிறுமி, திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், பள்ளியில் வழங்கப்பட்ட மாத்திரைகளை சிறுமி உட்கொண்டதாலையே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறிய சிறுமியின் உறவினர்கள், சிறுமி பயின்ற மாநகராட்சி பள்ளிக்கு சென்று வாக்குவாததில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்