தலைவருக்கான தேர்தலில் துணை முதலமைச்சரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தின் சகோதரரான ஓ.ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதிகப்படியான வாக்குகளை பெற்ற ஒ.ராஜா முறைப்படி மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முன்னிலையில் ஒ.ராஜா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார், பின்னர் அவருக்கு அதிமுகவினர் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அதன் பின் அலுவலகம் வெளியே உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ராஜா, அதன்பின்பு தொண்டர்களின் உற்சாக வரவேற்பு பின்பு அங்கிருந்து விடைபெற்றார்.
இந்த நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் ராஜா நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அதிரடியாக அறிவித்தது. காலையில் மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், மாலையில் கட்சியில் நீக்கப்பட்டது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது