தமிழ்நாடு

ஆவின் பசும்பால் டப்பாக்களில் அடைத்து விற்பனை : 90 நாட்கள் வரை பசும்பால் கெடாமல் இருக்கும்

ஆவின் பசும்பால் இனிமேல் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட உள்ளது.

தந்தி டிவி

ஆவின் நிறுவனம் மூலம் பசும்பால், நெய், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பசும்பால் இனிமேல் டப்பாக்களில் அடைத்து விற்பனை செய்யப்பட உள்ளது. இதையொட்டி சென்னை சோழிங்க

நல்லூரில் உள்ள ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்தில் 30 கோடி ரூபாய் செலவில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் லிட்டர் பால் டப்பாக்களில் அடைத்து விற்பனை

செய்யப்பட உள்ளது. அந்த பால் 90 நாட்கள் வரை கெடாது என்றும், நீண்ட தூரம் பயணம் செல்பவர்கள் இந்த பாலை பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஆவின் பால் ஏற்கனவே டப்பாக்களில் அடைக்கப்பட்டு சிங்கப்பூருக்கு அனுப்பபட்டு வரும் நிலையில், புதிய டப்பா பால்விலை ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்