தமிழ்நாடு

பால் கொள்முதலில் ஆவின் புதிய சாதனை : ஒரே நாளில் 35,53,000 லிட்டர் கொள்முதல்

இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 35 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பாலை கொள்முதல் செய்து ஆவின் நிறுவனம் சாதனை படைத்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தின் பால் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக, கடந்த 1981ஆம் ஆண்டு, ஆவின் நிறுவனம் தனது சேவையை தொடங்கியது. நாள்தோறும் கிராமப்புறங்களில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து பாலை கொள்முதல் செய்து வினியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், நாளொன்றுக்கு அதிகபட்ச கொள்முதலாக கடந்த வாரம் 35 லட்சத்து 23 ஆயிரம் லிட்டர் கொள்முதல் செய்து சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் இந்த அளவு படிப்படியாக உயர்ந்து, தற்போது ஆவின் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக 35 லட்சத்து 53 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.

தமிழகத்தின் பால் தேவையில் 85 சதவீதத்தை ஆவின் பூர்த்தி செய்து வருவதாக, அதன் நிர்வாக இயக்குனர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்