தமிழ்நாடு

பால் விலையைத் தொடர்ந்து ஆவின் பால் பொருட்கள் விலை ஏற்றம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது.

தந்தி டிவி

* ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது ஆவின் பால் பொருட்களின் விலையும் உயர்த்தப்படுகிறது. வரும் புதன்கிழமை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரவுள்ளது.

* ஒரு லிட்டர் 460 ரூபாயாக இருந்த நெய், தற்போது 30 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது.

* 270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ பால் பவுடர்,

50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டு, இனி 320 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது.

* 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ பனீர், இனி 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

* ஆவின் வெண்ணெய் அரை கிலோ 230 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது 10 ரூபாய் உயர்த்தப்பட்டு 240 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.

* ஆவின் பால்கோவா ஒரு கிலோ 500 ரூபாயிலிருந்து 20 ரூபாய் உயர்த்தப்பட்டு 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

* ஆவின் டிலைட் பால் அரை லிட்டர் 26 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 30 ரூபாயாக விற்பனையாக உள்ளது.

* 22 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரை லிட்டர் நறுமண பால் 3 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால், இனிமேல் 25 ரூபாய்க்கு விற்பனையாகும்.

* அரை லிட்டர் தயிர் 25 ரூபாயில் இருந்து 2 ரூபாய் உயர்த்தப்பட்டு 27 ரூபாயாக விற்பனை செய்யப்பட உள்ளது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை