தமிழ்நாடு

நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்

நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி
நள்ளிரவு முதல் ஆவின் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ள நிலையில் தட்டுப்பாடின்றி பால் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நள்ளிரவு முதல் தமிழகத்தில் உள்ள 275 ஆவின் பால் டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதனால் சென்னைக்கு செல்ல வேண்டிய 13 லட்சம் லிட்டர் பால் நிறுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் போராட்டம் காரணமாக தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு