கொரோனா காரணமாக 2 மாத காலத்திற்கும் மேலாக கோவில்கள் பூட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் காரணமாக அம்மன் கோவிலை நோக்கி பக்தர்கள் படையெடுத்துள்ளனர். இருப்பினும், தொற்றுப் பரவல் காரணமாக சாமிக்கு அர்ச்சனை செய்ய முடியவில்லை என்றும் பக்தர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.