தமிழ்நாடு

Aadhaar OTP | அரசு மருத்துவமனையில் OTP இல்லாமல் சிகிச்சை இல்லை நோயாளிகள் கடும் அவதி

Aadhaar OTP | அரசு மருத்துவமனையில் OTP இல்லாமல் சிகிச்சை இல்லை நோயாளிகள் கடும் அவதி

thanthitv

ஆரணி அரசு மருத்துவமனையில் ஆதார், OTP நடைமுறை கட்டாயமாக்கப்பட்ட‌தால் நோயாளிகள் அவதி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் அரசு மருத்துவமனையில் புறநோயாளிகளுக்கு பதிவு சீட்டு வழங்க மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. நோயாளிகளின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு வரும் OTP-யை கொடுத்தால் மட்டுமே OP சீட்டு வழங்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், மருத்துவமனைக்கு வந்த ஏராளமான முதியவர்கள் OP சீட்டு பெற முடியாமல் சிரமப்பட்டனர். இதனால் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மருத்துவமனையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நோயாளிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு ஆதார் OTP நடைமுறைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

CM Vijay | TN Budget | பட்ஜெட்டில் புதிய திட்டங்கள்..CM விஜய் ஆலோசனை

Icecream அண்ணாநகரில் மதுபான ஐஸ்கிரீம் கிடைக்கிறதா? - தூக்கிவாரிப்போடும் தகவல்.. அலசும் ஆபீஸர்ஸ்

Negombo Prison Riot| சிறைக்குள் ரத்தம் தெறிக்க தெறிக்க கலவரம்.. 25 பேர் கோர பலி.. 50+ பேர் படுகாயம்

ADMK | AMMK | ``டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவில்’’ - கட்சிக்குள்ளேயே வலுவாக எழுந்த குரல்

Senthil Balaji's Brother Ashok | Lookout Circular | ED-க்கு எதிராக செந்தில் பாலாஜியின் சகோதரர் மனு