மஞ்சுவிரட்டில் கவனக்குறைவால் பறிபோன இளைஞரின் உயிர் 
தமிழ்நாடு

மஞ்சுவிரட்டில் கவனக்குறைவால் பறிபோன இளைஞரின் உயிர்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாசி மக மஞ்சுவிரட்டில், காளை முட்டியதில் 23 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், மாடு முட்டியதில் இளைஞர் காயமடைந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

thanthitv

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மாசி மக மஞ்சுவிரட்டில், காளை முட்டியதில் 23 வயது இளைஞர் உயிரிழந்த நிலையில், மாடு முட்டியதில் இளைஞர் காயமடைந்த காட்சிகள் வெளியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் அரளிப்பாறையில் கோடீஸ்வரர் கோவில் மாசி மக பெருந்திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

இந்த போட்டியில் சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன.

வயல்வெளியில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டபோது, நாட்டார்மங்கலத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் முன்புறம் சென்ற காளையை வீடியோ எடுக்க முயன்றார். அப்போது பின்னால் வந்த காளையை கவனிக்காததால், ஆக்ரோஷமாக வந்த காளை முட்டி தூக்கி எறிந்தது.

படுகாயமடைந்த ராமநாதன் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்