தமிழ்நாடு

கொல்லிமலை அருவி உச்சியில் இருந்து 50 அடி ஆழத்தில் விழுந்த இளைஞர் - திக்..திக் நொடிகள் - பதற வைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியை சேர்ந்த குணால் என்பவர், நண்பர்களுடன் சேர்ந்து நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது மாசிலா அருவியின் உச்சியில் இருந்து தண்ணீர் கொட்டும் பாதையில், 50 அடி பள்ளத்தில் குணால் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் குணாலுக்கு முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், குணாலை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குணால் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்