தமிழ்நாடு

வீட்டில் தனியாக இருந்த பெண் - புர்கா அணிந்து நுழைந்த இளைஞர் - சுத்தியலால் தலையில் விழுந்த அடி

தந்தி டிவி

வீட்டில் தனியாக இருந்த பெண் - புர்கா அணிந்து நுழைந்த இளைஞர் - சுத்தியலால் தலையில் விழுந்த அடி

திருவாரூரில் புர்கா அணிந்து கொண்டு பெண்ணின் தலையை சுத்தியலால் தாக்கி, நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூரை சேர்ந்த ஜாஸ்மின் பேகம் என்பவர், கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வரும் நிலையில், 3 குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜாஸ்மின் பேகம் வீட்டில் தனியாக இருந்த நிலையில், புர்கா அணிந்த இளைஞர் ஒருவர் வீட்டில் புகுந்து, ஜாஸ்மினின் தலையில் சுத்தியலால் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஜாஸ்மின் மயக்கமடைந்த நிலையில், அவரது கழுத்தில் இருந்த 7 சவரன் தங்க நகைகளை இளைஞர் பறித்துக் கொண்டு தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த ஜாஸ்மின் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்