தீபாவளி நாளில் எந்த குடும்பத்துக்கும் நேர கூடாத நிலை.. கறி வாங்க செல்லும்போது தந்தை, மகன் உயிர் பிரிந்தது
#diwalitragedy #madurainews
மதுரை மாவட்டம் மேலூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அழகர்கோவில் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒரு வாகனத்தில் சென்ற ஆறுமுகம் மற்றும் அவரது மகன் லோகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நவீனும் உயிரிழந்தார். மூவரும் இறைச்சி வாங்கச் சென்றபோது விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி நாளில் ஒரே விபத்தில் 3 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது