#kovai #thanthitv
கோவை பூமார்க்கெட் லைட்ஹவுஸ் பகுதியில், சாக்கடை கால்வாயில் சிக்கிக்கொண்ட குட்டி நாயை தீயணைப்புத் துறையினர் சுமார் இரண்டரை மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.வீடுகளின் முன்புள்ள சாக்கடை கால்வாயில் தவறி விழுந்த குட்டி நாய், வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டது.இதுகுறித்து தகவலறிந்த கோவை தெற்கு தீயணைப்பு நிலைய வீரர்கள், முகமது சலீம் தலைமையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கால்வாய் முழுவதும் கான்கிரீட் தளங்களால் மூடப்பட்டிருந்ததால், சுமார் 2 அடி ஆழத்தில், 10 அடி தொலைவில் சிக்கியிருந்த நாயை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது.இதையடுத்து, பிவிசி குழாயில் கம்பியை இணைத்து நூதன முறையில் நாயை வெளியே இழுத்து மீட்டனர்.இரண்டரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட குட்டி நாய், தனது தாயுடன் சென்றது.சிறிய உயிரைக் காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.