Chengalpattu | போதையில் தாயை வெட்டிய மகனை துப்பாக்கியால் சுட்ட தந்தை -சென்னை அருகே அரங்கேறிய பயங்கரம் #chengalpattu #attack #crime #thanthitv செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் மதுபோதையில் தாயை வெட்டிய மகனை, தந்தை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம், பூஞ்சேரி நரிக்குறவர் குடியிருப்பில் வசிக்கும் பிரபாகரன் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதோடு, தாயை கத்தியால் வெட்டியுள்ளார்.. இதையடுத்து, மகன் பிரபாகரனுக்கும், தந்தை சேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடைந்த தந்தை சேகர், கொக்கு சுடும் நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து மகனை சுட்டுள்ளார். இதில், பிரபாகரனின் இரண்டு கால்களிலும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. தகவல் அறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார் துப்பாக்கி சூட்டினால் காயமடைந்த பிரபாகரை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். மகனை துப்பாக்கியால் சுட்ட சேகரை மாமல்லபுரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.