தமிழ்நாடு

Theni News| பேரன்கள் கண்ட காட்சி - தாத்தாவின் தலையை வெட்டி எடுத்த அப்பா

பேரன்கள் கண்ட காட்சி - தாத்தாவின் தலையை வெட்டி எடுத்த அப்பா

thanthitv

#fatherson #theninews

தேனி மாவட்டம் கூடலூர் அருகே தந்தையின் தலையை துண்டாக வெட்டி எடுத்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார். கருநாக்கமுத்தன்பட்டி தண்ணீர் தொட்டி தெருவை சேர்ந்த 80 வயதான முத்துமாயன், தனியாக வசித்து வந்துள்ளார். அவரது மகன் கணேசன் தேங்காய் வெட்டும் கூலி தொழில் செய்து வருவதுடன், மனநல பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. நள்ளிரவில் தந்தையை பார்க்க சென்றபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், அரிவாளால் முத்துமாயன் தலையை துண்டித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர். காலையில் தாத்தாவை பார்க்க சென்ற பேரன் ஹரிஹரன், முத்துமாயன் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த கூடலூர் வடக்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், கணேசனை கைது செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

EV Velu | DVAC| எ.வ.வேலு மற்றும் அவரின் மகன் மீது பாய்ந்தது FIR

veeramani | ஜெம் வீரமணி வழக்கு.. சமூக வலைதள பக்கங்களுக்கு சைபர் கிரைம் ‘வார்னிங்’

BREAKING || RTI சட்டத்தில் இருந்து விலக்கு அளித்த அரசாணை - எதிர்ப்பு எழுந்த நிலையில் ரத்து

BREAKING | உதயநிதியின் பிரசார பேச்சு.. "அவங்க வீட்டு பெண்களிடம் போட்டு காட்ட வேண்டும்"-அமைச்சர் CTR

School | Raid | அன்பில் மகேஷை அடுத்து முத்துக்குமார்.. CCB அதிரடி ரெய்டு