தமிழ்நாடு

Nellai death | நெல்லையை உறைய வைத்த பகிர் திருப்பம் - மாந்திரீகம் மூலம் பெண்ணை மயக்கிய மாயாவி..

தந்தி டிவி

நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டது அம்பலம் - 4 பேர் கைது

நெல்லை பழவூர் அருகே பெண் கொலை செய்யப்பட்டு அவரது உடல் கால்வாயில் வீசப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் பழவூர் அருகே மாடன்பிள்ளைதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கயல்விழி என்பவர் தனது கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், கயல்விழி கடந்த வருடம் அக்டோபர் மாதம் கோவிலுக்கு சென்று வருவதாக, வீட்டிலிருந்து சென்றவர் அதன் பின்னர் வீட்டிற்கு திரும்ப வரவில்லை என்று பழவூர் காவல் நிலையத்தில் அவரது தந்தை புகாரளித்தார். புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். காணாமல் போன கயல்விழியின் தொலைபேசி தகவல் தொடர்பான விவரங்களை சேகரித்த போலீசார், குமரி மாவட்டம் கொட்டாரத்தைச் சேர்ந்த சாமியார் சிவசாமி என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில், கயல்விழி தனது கணவருடன் சேர்த்துவைக்க சிவசாமியை அணுகிய நிலையில், அவர் மாந்திரீக முறையில் பரிகாரங்கள் செய்து, கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி கயல்விழியிடம் தொடர்ச்சியாக பணம் பெற்று வந்துள்ளார். ஆனால் பணம் கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததால் கயல்விழி தொடர்ச்சியாக சிவசாமியை அணுகிய நிலையில், கயல்விழியின் பலவீனத்தை பயன்படுத்தி, சிவசாமி கயல்விழியிடம் நகைகளை பறிக்க திட்டமிட்டு, தனது உறவினர்கள் 3 பேருடன் சேர்ந்து கயல்விழியை காரில் அழைத்துச் சென்று குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் வைத்து கயல்விழியை கழுத்தை நெரித்துக் கொன்று அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்துள்ளனர். இதனையடுத்து கயல்விழியின் உடலை நெல்லை சேரன்மகாதேவி அருகே உள்ள 80 அடி கால்வாயில் வீசிச்சென்றது தெரியவந்தது. இதனையடுத்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் கைது செய்த போலீசார், கயல்விழியிடம் பறிக்கப்பட்ட 7 சவரன் தங்க நகையையும் மீட்டனர்.

Edappadipalanisamy | ஈபிஎஸ்ஸை எதிர்த்து விஜய் இறக்கிய வேட்பாளர் - பேரை அறிவித்ததும் வந்த ரியாக்‌ஷன்

"+2 முடித்தவுடன் ரூ.20 லட்சம்... மாதம் ரூ.4000" - அதிரவிடும் விஜய்யின் அடுத்த வாக்குறுதிகள்

TVK Candidate List |``நான் நிற்கும் தொகுதி’' -ஒட்டுமொத்த களத்திற்கும் அதிர்ச்சி ட்விஸ்ட் வைத்த விஜய்

Vijay | TVK Candidate List |``திருச்சி கிழக்கில் C. ஜோசப் விஜய் போட்டி'' - தமிழகமே எதிர்பாரா முடிவு

Vijay | இதுவரை சொல்லாத வார்த்தை... முதல்முறையாக கைகூப்பி கேட்ட விஜய்