தமிழ்நாடு

Samayapuram | சமயபுரம் கோயிலில் அதிபயங்கரம் 3 பெண் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

சமயபுரம் கோயிலில் அதிபயங்கரம் 3 பெண் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம்

thanthitv

சமயபுரம் கோயிலில் அதிபயங்கரம் 3 பெண் பக்தர்களுக்கு நேர்ந்த சோகம் #Samayapuram #thanthitv #roofcollapse சமயபுரம் கோயிலில் சிமெண்ட் பூச்சு விழுந்து 3 பக்தர்கள் படுகாயம் புகழ்பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று அதிகாலை நிகழ்ந்த விபத்து பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிலின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள மண்டபத்தில், பக்தர்கள் தங்குவதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் இன்று அதிகாலை மூன்று பெண் பக்தர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக மண்டபத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து அவர்கள் மீது விழுந்தன. இந்த விபத்தில் மண்டபத்தில் படுத்திருந்த மூன்று பெண் பக்தர்களும் பலத்த காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கோவிலின் பராமரிப்புப் பணிகள் குறித்துப் பக்தர்கள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்