நெல்லையில் இன்ஸ்பெக்டர் தொந்தரவால் தற்கொலை செய்யப்போவதாக கண்ணீருடன் ஆடியோ வெளியிட்ட ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் அழகர் தனக்கு கடுமையான மன உளைச்சலும், பணியில் அதிக தொந்தரவும் கொடுத்து வருவதாகவும், அதனால் தான் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாகவும் ஏட்டாக பணியாற்றி வரும் ஜோயல் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில், உயர் அதிகாரிகளிடம் முறைப்படி புகார் தெரிவிக்காமல், சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியிட்டதாகக் கூறி, ஏட்டு ஜோயலை சஸ்பெண்ட் செய்து நெல்லை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் தெரிவித்த ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டது காவலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயர்மட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.