கோவையில் தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை கோவிலுக்குள் வீசிச்சென்ற சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கோவை கவுண்டம்பாளையம் அருகே சரவணநகர் பகுதியை சேர்ந்த தம்பதி சிவராமச்சந்திரன் மற்றும் அமுல், மாட்டுத்தொழுவத்தில் வேலை செய்த போது, அங்குள்ள திருப்பதி கோவிலில் குழந்தையின் அழுகுறல் கேட்டுள்ளது. இதனையடுத்து தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் குழந்தையை மீட்ட தம்பதி, காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். தற்போது குழந்தைக்கு முதலுதவி தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையை வீசிச்சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.