தமிழ்நாடு

Andippatti | ஊரே மணக்க கம கம கிடா விருந்து.. ஆண்கள் மட்டும்

ஊரே மணக்க கம கம கிடா விருந்து.. ஆண்கள் மட்டும்

thanthitv

ஊரே மணக்க கம கம கிடா விருந்து.. ஆண்கள் மட்டும் #Andippatti #festival #thanthitv ஆண்டிப்பட்டி அருகே சடையாண்டி சாமி கோவில் திருவிழாயொட்டி110 ஆட்டுக்கிடாய்கள் வெட்டி விடிய விடிய அசைவ விருந்து பரிமாறப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில் உள்ள சடையாண்டி சாமி கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் இந்த திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, நள்ளிரவு நடைபெற்ற விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் கலந்து கொண்டனர். நேர்த்திக்கடனாக கொண்டுவரப்பட்ட 110 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு சாமிக்கு படையலிடப்பட்டன. தொடர்ந்து ஆண்கள் மட்டுமே இணைந்து பிரமாண்டமாக அசைவ விருந்து சமைத்தனர். நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை விடிய விடிய நடைபெற்ற விருந்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உணவருந்தினர்.

Periyar Arivulagam | பெரியார் அறிவுலகம் முறைகேடு.. சிக்கியது முக்கிய ஆவணங்கள்

Akwan Cyclone| இன்று மாலையே உக்கிரமாக மாறும் அசுரன் புயல்.. ஆரஞ்சு அலர்ட் விடுப்பு

Tanishq | மதுரை தனிஷ்க் கொள்ளை வழக்கு.. நீதிபதி முன் நிறுத்தப்பட்ட நிஷாந்த்

Gem Veeramani Case Update| ஜெம் வீரமணி வழக்கில் எதிர்பாரா ஷாக்.. SRMU கண்ணையாவை துருவும் SIT

Madurai Tanishq | தனிஷ்க் கொள்ளை விவகாரம்.. நிஷாந்துக்கு முக்கிய பரிசோதனை