தமிழ்நாடு

Actress Premapriya | மகளை பார்க்க சென்ற நடிகை பிரேமபிரியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

மகளை பார்க்க சென்ற நடிகை பிரேமபிரியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

thanthitv

Villupuram | Actress Premapriya | மகளை பார்க்க சென்ற நடிகை பிரேமபிரியாவிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி

#villupuram #premapriya #thanthitv

மகளை பார்க்க சென்ற தன்னை தாக்கியதாக நடிகை பிரேமபிரியா புகார் சினிமா நடிகை பிரேமபிரியா, விழுப்புரத்தில் உள்ள தனது மகளைப் பார்க்கச் சென்றபோது மருமகன் குடும்பத்தினர் தாக்கியதாக பரபரப்பு புகார் அளித்துள்ளார்... நேற்று இரவு குழந்தைவேல் நகரில் உள்ள மகளின் வீட்டிற்கு சென்றபோது, மகளின் கணவர் , அவரது அண்ணன், தந்தை, தாய் ஆகியோர் தன்னை தாக்கியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். கட்டை மற்றும் காலால் தாக்கியதில் தலை, மார்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக கூறியுள்ள பிரேமபிரியா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதையடுத்து விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், புகாரில் கூறப்பட்டுள்ள நால்வரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தனக்கு பணமோ, வேறு உதவியோ தேவையில்லை என்றும், தனது மகள் தன்னுடன் பேச வேண்டும் என்பதே தனது கோரிக்கை என்றும் நடிகை பிரேமபிரியா தெரிவித்துள்ளார்.

Salem தோண்டி எடுக்கப்பட்ட உடல் - மனைவியும் மகனுமே சேர்ந்து அரங்கேற்றிய கொடூரம்.. சேலத்தில் பயங்கரம்

ECI | `30 மாநிலங்களில் நடந்த SIR' - மொத்த நாடும் அறிய சற்றுமுன் உடைத்து சொன்ன தேர்தல் ஆணையம்

EPS | ADMK | TN By Election | "சட்டமன்றம் சினிமா மாதிரி ஆகிருச்சு.." - விஷயத்தை ஓபனாக உடைத்த ஈபிஎஸ்

Gold Medal | ஈரானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்தியா

Gem Veeramani Case ``ஜெம் வீரமணி வழக்கில் சாட்சிகளை கலைக்க..’’ கோர்ட்டில் `திடுக்’