#madurai #crimenews #thanthitv Madurai | கொலை செய்துவிட்டு அருகிலேயே ஹாஸ்பிடலில் ட்ரீட்மெண்ட் எடுத்த நபர் மதுரையில் இளைஞரை அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துவிட்டு, காயத்துக்கு சிகிச்சை பெற்ற இருவர் போலீசாரிடம் சிக்கியுள்ளனர்.சிலைமான் தந்தை பெரியார் நகரில் தனியார் கல்லூரி அருகே இளைஞர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதனையடுத்து அருகாமையில் உள்ள மருத்துவமனைகளில் போலீசார் விசாரணை நடத்தியதில், வளையங்குளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்ணில் ஏற்பட்ட காயத்திற்கு ஒருவர் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
அங்கு சென்ற போலீசார் வேடர் புளியங்குளத்தைச் சேர்ந்த ராஜபாண்டி மற்றும் கப்பலூரைச் சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், இறந்தவர் கொடைக்கானலை சேர்ந்த தெய்வேந்திரன் என்பதும் இவர் ராஜபாண்டியின் மனைவி பானுப்பிரியாவை சந்தித்து விட்டு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது பின் தொடர்ந்து வந்த ராஜபாண்டி அவரது நண்பருடன் சேர்ந்து இவரை வெட்டிக் கொன்றதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.