தமிழ்நாடு

பைக்கில் போகும் போது திடீரென வழிமறித்த கும்பல் - கத்தியை காட்டி பல லட்சங்கள் பறிப்பு

தந்தி டிவி

சென்னை அருகே, தனியார் நிறுவன ஊழியரிடம் 7 பேர் கொண்ட மர்மகும்பல், கத்தியை காட்டி மிரட்டி 30 லட்சம் ரூபாய் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெற்குன்றம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர், கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மொபைல் ஷாப் மற்றும் மணி டிரான்ஸ்பர் கடையில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். வாடிக்கையாளர்களிடம் பெற்ற 30 லட்சம் ரூபாய் அளவிலான பணத்தை, சக்திவேல் தனது அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். எழும்பூர் ஈவேரா சாலை அருகே சென்றபோது, மூன்று இரு சக்கர வாகனத்தில் வந்த 7 பேர், கத்தியை காட்டி மிரட்டி 30 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றது தெரியவந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை