தேவகோட்டையில் இருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தை ஆண்டிசூரணி விளக்கு பகுதியில், இரு சக்கர வானத்தில் வந்த 3 பேர் கொண்ட மர்ம நபர்கள் வழிமறித்துள்ளனர். கத்திகளுடன் பேருந்தில் ஏறிய அவர்கள் பேருந்தில் பயணித்த பயணிகளை மிரட்டி, சூசையப்பர்பட்டிணத்தை சேர்ந்த கல்லூரி மாணவன் சிவக்குமாரை பிடித்து அவரது வலது கையில் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த மாணவன் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார் தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒடும் பேருந்தை வழிமறித்து மாணவனை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.