தமிழ்நாடு

Theni Flood| 6 மாதமாக வறண்ட நிலத்தில் கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளம்

6 மாதமாக வறண்ட நிலத்தில் கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளம்

thanthitv

6 மாதமாக வறண்ட நிலத்தில் கரைபுரண்டோடிய காட்டாற்று வெள்ளம்.. ஓரிரவில் அதிசயம் நிகழ்த்திய இயற்கை.. மகிழ்ச்சி `வெள்ளத்தில்’ மக்கள்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள குரங்கணி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இரவு முழுவதும் விடிய விடிய மழை பெய்தது. இதனால் குறைந்த அளவே நீர்வரத்து இருந்த குரங்கணி அருவி நீரோடை பகுதியில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக நீரின்றி வறண்டு கிடந்த அணைப்பிள்ளையார் தடுப்பணை பகுதிக்கும் தற்போது நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வறண்டு கிடந்த கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டு வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் குரங்கணி நீரோடை பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்