தமிழ்நாடு

மாணவர்கள் இன்றி பறந்த கொடி.. வெறிச்சோடி போன பள்ளி.. முகம் வாடிய ஆசிரியர்கள்

தந்தி டிவி

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர தின விழாவை, ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், 385வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மட்டுமே கலந்து கொண்டனர். இப்பள்ளியில் பயிலும் தங்கள் குழந்தைகளை, விழாவுக்கு அனுப்பாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி தொடங்கப்பட்ட 99 ஆண்டுகளில், முதன்முறையாக மாணவ, மாணவிகளின்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் இன்றி பறந்த கொடி

வெறிச்சோடி போன பள்ளி

முகம் வாடிய ஆசிரியர்கள்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்