தமிழ்நாடு

தனியார் பைக் ஷோ ரூமில் தீ விபத்து... 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரை

சங்கரன் கோவிலில், தனியார் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயல் எரிந்து சாம்பலாகின.

தந்தி டிவி

சங்கரன் கோவிலில், தனியார் பைக் ஷோ ரூமில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயல் எரிந்து சாம்பலாகின.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் உள்ள தனியார் பைக் ஷோ ரூமில் அதிகாலை 3 மணி அளவில், மின் கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து தீயை அணைத்தனர். மேலும், 50க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீக்கிரையானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தீயணைப்புதுறை அதிகாரி கவிதா கூறுகையில், இந்த இரு சக்கர வாகன ஷோரூமில் எந்த விதமான பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்