Lord Murugan | மனமுருகி பாடிய பெண் பக்தர் - தன்னையே மறந்து கண்திறந்த முருகன்? | Villupuram #villupuram #lordmurugan #murugantemple #thanthitv விழுப்புரம் கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததாக தகவல் விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள தீப்பாஞ்சாலம்மன் கோவிலில், முருகன் சிலையின் இடது கண் திறந்திருந்ததாகப் பரவிய தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அப்போது முருகன் சன்னதி முன்பு பாடல் பாடிக்கொண்டிருந்த பெண் பக்தர், சிலையின் இடது கண் திறந்திருப்பது போல் தெரிந்ததாகக் கூறி மற்ற பக்தர்களிடம் தெரிவித்தார். இந்தத் தகவல் பரவியதைத் தொடர்ந்து சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் கோவிலில் குவிந்து, நீண்ட வரிசையில் நின்று முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் அருள் வந்து ஆடியதாகவும் கூறப்படுகிறது.