தமிழ்நாடு

பல தலைமுறைகளை கடந்த மிகச் சிறிய குர்ஆன்-ஐ.. பாதுகாத்து வரும் ஒரு குடும்பம்

தந்தி டிவி

மயிலாடுதுறை மாவட்டம் நீடுரில் உள்ள பழமை வாய்ந்த மிகச்சிறிய அளவிலான குரானை மத்திய தொல்லியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.

நீடூர் பகுதியை சேர்ந்த அமீனுல்லா என்பவரின் குடும்பத்தினர் பல தலைமுறைகளாக மிகச்சிறிய அளவிலான குரான் புத்தகத்தை பாதுகாத்து வருகின்றனர். இந்த குரான் வைக்கப்பட்டுள்ள சிறிய பெட்டியானது, 68 வகையான உலோகங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. தனது மூதாதையர்கள் பாதுகாத்து வந்த இந்த குரான், எந்த நூற்றாண்டை சேர்ந்தது, என ஆராய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமீனுல்லா மனு அளித்தார். அதன்படி, கடந்த ஆண்டு மாநில தொல்லியல் துறையினர் இந்த குரானை ஆராய்ச்சி செய்தனர். இந்நிலையில் வெறும் 19 பக்கத்தில் எழுதப்பட்டுள்ள இந்த குரானை, மத்திய தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்துள்ளனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்