விண்ணமங்கலம் ஆற்றின் மெய்சிலிர்க்க வைக்கும் ட்ரோன் காட்சி
#Arani #Vinnamangalam #VinnamangalamRiver #Flood #FlashFlood #HeavyRain
கனமழையால் ஆரணி அருகே விண்ணமங்கலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த கனமழையால், ஆரணி அருகே விண்ணமங்கலம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அந்த டிரோன் காட்சிகளை பார்க்கலாம் ஜவ்வாதுமலை பகுதியில் பெய்து வரும் கனமழையால், மழையடிவாரத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆரணியில் உள்ள விண்ணமங்கலம் ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த காட்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கால் செங்கம், போளூர், கலசப்பாக்கம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.