தமிழ்நாடு

Challenge Vote| தனக்கு பதிலாக போடப்பட்ட கள்ள ஓட்டு - கடைசி வரை மல்லுக்கட்டி `சேலஞ்ச்’ ஓட்டு போட்டார்

தனக்கு பதிலாக போடப்பட்ட கள்ள ஓட்டு - கடைசி வரை மல்லுக்கட்டி `சேலஞ்ச்’ ஓட்டு போட்டார்

thanthitv

#tnelection2026 #challengevote நெல்லையில் கள்ளஓட்டால் பாதிக்கப்பட்ட நபர் சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்தார் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனது ஓட்டை வேறு யாரோ போட்டுவிட்டதால் அதிர்ச்சி அடைந்த வாக்காளர் சேலஞ்ச் ஓட்டை பதிவு செய்தார். நெல்லை சிந்து பூந்துறை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருக்கு பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி, பாகம் எண் ஒன்பதில் ஓட்டு உள்ளது. இவர் தனது வாக்குச்சாவடியில் ஓட்டு போடுவதற்காக சென்ற போது, ஏற்கனவே நீங்கள் ஓட்டு போட்டுவிட்டீர்கள் என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முக சுந்தரம், தனது விரல்களை காட்டி தான் இன்னும் ஓட்டே போடவில்லை என தெரிவித்தார். சண்முகசுந்தரம் விடாப்பிடியாக முறையிடவே, அவரை சேலஞ்ச் ஓட்டு போட வாக்குச்சாவடி அலுவலர்கள் அனுமதித்தனர். அதன்படி இரண்டு ரூபாயை மட்டும் விண்ணப்ப கட்டணமாக செலுத்தி, சண்முக சுந்தரம் தனது ஓட்டை பதிவு செய்தார்.

Tamilnadu Election 2026 | ECI | நேற்று முடிந்த தேர்தல் - இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்

TN Election 2026 | தமிழகத்தின் அதிபெரும் உச்சம் இதுவா..? கணிப்பை விஞ்சும் களநிலவரம்..

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்