தமிழ்நாடு

டி.வி ரிமோட்யைஉடைத்ததால் 7-ம் வகுப்பு மாணவி விபரீத முடிவு - மேட்டூர் அருகே அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே, டிவி ரிமோட்டை உடைத்ததால் பெற்றோருக்கு பயந்து 7-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக்குட்டையை சேர்ந்த கூலித் தொழிலாளி சக்திவேல் - ரூபிணி தம்பதியருக்கு கவியரசி, பிரபா ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கவியரசி, அரசு பெண்கள் பள்ளியில் 7-ம் வகுப்பு பயின்று வந்தார். பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் சிறுமிகள் இருவரும் டி.வி பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், கவியரசி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சகோதரிகளிடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் கவியரசி டி.வி ரிமோட்டை உடைத்ததாகவும், பின்னர் பெற்றோருக்கு பயந்து வீட்டின் கதவை தாழிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகவும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்