97 வயது முதியவருக்கு மறுவாழ்வு - ரேலா மருத்துவமனை சாதனை சென்னையில் 97 வயது முதியவருக்கு ஏற்பட்ட கடுமையான தோள்பட்டை தசைநார் கிழிசலை, குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் அதிநவீன சிகிச்சை மூலம் வெற்றிகரமாகச் சரிசெய்து சாதனை படைத்துள்ளனர். முதியவரின், வயது மற்றும் இதயப் பலவீனம் காரணமாகப் பொது மயக்க மருந்து அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரத்துப் போகச் செய்து, தோள்பட்டையில் இயற்கையாகவே மட்கி அழியக்கூடிய சிறப்புப் பலூனைப் பொருத்தும், அதிநவீன நுண்துளை அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மேற்கொண்டனர். எலும்பியல், நுண்துளை அறுவை சிகிச்சை மற்றும் விளையாட்டு மருத்துவ நிபுணர் பிரகாஷ் அய்யாதுரை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துறை தலைவர் அசோக் எஸ்.கவாஸ்கவர் ஆகியோர் தலைமையில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் சிகிச்சை முடிந்த இரண்டே நாட்களில் முதியவர் பூரண குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார்.