தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 9 பேர் கைது : இலங்கை கடற்படை நடவடிக்கை

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றது தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர். நேற்றிரவு நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 2 படகுகளுடன் 9 மீனவர்களை சிறைபிடித்தனர். நாகை மாவட்டத்தை சேர்ந்த 6 மீனவர்களையும், புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த 3 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் மீனவர்கள் அனைவரும் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என தெரிகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை