தமிழ்நாடு

"8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும்" - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டிலிருந்து பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கையால் ஆசிரியர்கள், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள் நடத்தவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு இதேபோன்று உத்தரவு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்